Tuesday, February 11, 2014

ADSL2+ வயர்லெஸ் மோடம் அல்லது ரூட்டர்– கட்டமைப்பது (configure) எப்படி?

பொதுவாக எல்லா வகையான ADSL2+ வயர்லெஸ் மோடம்(modem) அல்லது ரூட்டர்(router) கான்பிகர் செய்யும் விதம் ஒரே மாதிரியாக தான் இருக்கும். சிறு வேறுபாடுகள் இருக்கலாம். இந்த பதிவில் நான் Cisco Linksys WAG-12௦N மோடம் கான்பிகர் செய்வது எப்படி என்று தொகுத்து இருக்கிறேன். இது மிக விரிவான செய்முறை விளக்கம் இல்லை என்றாலும் முக்கியமான தகவல்கள் தமிழில் கொடுக்க வேண்டும் என்பதற்காக முடிந்தவரை கொடுத்து இருக்கிறேன். மேலும் அதிக தகவல்களுக்கு பதிவின் முடிவில் கொடுக்கப்பட்டுள்ள சில ஆங்கில வலைதள சுட்டிகளின் வழியாக அறிந்து கொள்ளலாம்.

புதிதாக கான்பிகர் செய்யும்போது ரீசெட் செய்வது நல்லது. (எச்சரிக்கை: இது ஏற்கனவே இருக்கும் கான்பிகரேசன் அனைத்தையும் அழித்து விடும்.) முதலில் மோடமை கணினியுடன் ஒரு RJ-45 கேபிள் மூலம் இணைக்க வேண்டும். கணினிக்கு 192.168.1.x என்ற series இல் ஒரு ip முகவரியை கொடுதுக்கொள்ளவும். பின்னர் மின்சார இணைப்பும் கொடுக்க வேண்டும். பெரும்பாலும் ரீசெட் பட்டன் மிகசிறிய அளவில் மோடமின் பின்புறம் காணப்படும். இதை ஒரு கூர்மையான பொருள் கொண்டு மெதுவாக அழுத்த வேண்டும். இப்பொழுது மோடம் மீண்டும் ரீபூட் ஆகும்.

பின்னர் கணினியில் உலாவியை(Browser) இயக்கி அதில் http://192.168.1.1 என்று டைப் செய்து என்ட்டர் செய்யவும். இப்பொழுது user name மற்றும் பாஸ் வோர்ட் கொடுக்க வேண்டும். இது பெரும்பாலும் admin மற்றும் admin என்றே இருக்கும்.


கீழே கொடுக்கப்பட்டுள்ள திரையில் வட்டமிடப்படுள்ள பிரிவுகளை மட்டும் configure செய்தால் போதுமானது. Username மற்றும் password கட்டங்களில் உங்கள் இனைய இணைப்பு விபரங்களை அளிக்க வேண்டும், இது ISP லிருந்து பெற்றுகொள்ளலாம். 


மற்றவைகளை கீழே கொடுத்து உள்ளபடி கான்பிகர் செய்யவும். save settings கொடுக்கவும்.


பின்னர் வட்டமிடப்படுள்ளபடி wireless என்ற பிரிவை தேர்வு செய்து அதில் Basic wireless settings தேர்வு செய்யவும். இதிலும் கீழே கொடுத்துள்ளபடி கான்பிகர் செய்யவும். SSID என்ற இடத்தில நமக்கு விருப்பமான பெயர் கொடுத்துக்கொள்ளலாம். save settings கொடுக்கவும்.


பின் wireless security என்ற துணைப்பிரிவை தேர்வு செய்யவும். அதில் கீழே கொடுத்துள்ளபடி கான்பிகர் செய்யவும். Preshared Key என்ற இடத்தில நமக்கு விருப்பமான பாஸ்வோர்ட் கொடுத்துக்கொள்ளலாம். save settings கொடுக்கவும்.


பின்னர் Status பிரிவில் சென்று பார்க்கும்போது Connected என்று வர வேண்டும். இப்பொழுது இன்டர்நெட் மற்றும் லோக்கல் wireless இயங்க ஆரம்பித்து விடும்.


http://dhruva-bsnl.blogspot.in/2011/02/how-to-configure-linksys-wag120n-modem.html



Monday, February 10, 2014

டெம்பிள் ரன் – ஆஸ்


ஆண்ட்ராய்ட் அல்லது ஐ-போன் தெரிந்தவர்களுக்கு டெம்பிள் ரன் கேம் தெரிந்திருக்காமல் இருக்க வாய்ப்பில்லை. ஒரு கற்கால கோயிலில் இருந்து அகழ்வாராய்ச்சியாளர்கள் மான்ஸ்டார் களிடம் இருந்து தப்புவது போன்ற ஒரு விளையாட்டு. முடிவில்லாமல் சென்று கொண்டே இருக்கும். இதில் மூன்று விதமான வெளியீடுகள் வந்துள்ளன. 1 மற்றும் 2 ஆண்ட்ராய்டில் இலவச பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மூன்றாவது வெளியீடான டெம்பிள் ரன் - ஆஸ் பணம் செலுத்தி பதிவிறக்கி கொள்ளலாம். இது  Disney கம்பனியின் வெளியீடு.




இதுவும் முதல் இரண்டு பதிப்புகளை போலவே தப்பிப்பதை அடிபடையாக கொண்டது. இதில் சிறப்பு அம்சமாக இதிலேயே நான்கு வெவ்வேறு உலகங்களை உள்ளடக்கியது. (நிறுவிய பின்னர் கேமின் உள்ளிருந்தே மற்ற உலகங்களை பதிவிறக்கி கொள்ள வேண்டும்.) ஆண்ட்ராய்டின் மிகப் புகழ்பெற்ற விளையாட்டுக்களில் டெம்பிள் ரன் ஒன்றாகும். டெம்பிள் ரன் - ஆஸ் இங்கிருந்து பதிவிறக்கி கொள்ளலாம்.

https://play.google.com/store/apps/details?id=com.disney.TempleRunOz.goo

http://www.mediafire.com/download/da1ibk5ez799w8j/com.disney.TempleRunOz.goo-38-v1.6.0.apk

Wednesday, July 31, 2013

தேனில் விஷம்


டில்லியைச் சேர்ந்த அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் (CSE) மாசு கண்காணிப்பு ஆய்வகம் மூலம் நடத்தப்பட்ட ஒரு சமீபத்திய ஆய்வு, இந்தியாவில் விற்கப்படும் தேன்களில் antibiotic எனும் பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கும் மருந்து கலந்து உள்ளதாக தெரிவிக்கிறது.  மேலும் நடத்தப்பட்ட விசாரணை, இந்தியாவில் இரட்டை தரக்கட்டுபாடு கடைபிடிக்கபடுவதால் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தேனிலும் இதே போன்ற ஆண்டிபயாடிக் கலப்படம் உள்ளதை சுட்டிக்காட்டுகிறது.
டில்லியில் நடத்தப்பட்ட CSE –ன் இந்த ஆய்வு, அங்கு விற்கப்படும் முன்னணி பிராண்டுகளில் கூட அதிக அளவில்  ஆண்டிபயாடிக் உள்ளதை கண்டுபிடித்துள்ளது.
இதில் டாபர் மற்றும் பதஞ்சலி போன்ற உள்நாட்டு மற்றும் சில வெளிநாட்டு கம்பெனிகளும் (Nectaflor, Capilano) அடங்கும்.
இம்மருந்துகளின் தொடர்ச்சியான நீண்ட கால பயன்பாடு மோசமான உடல் கோளாறுகளையும் மேலும் கிருமிகளிடம் ஆண்டிபயாடிக் எதிர்ப்பு சக்தியையும் தோற்றுவிக்கக்கூடும்.
இந்த காரணத்திற்காக பெரும்பாலான நாடுகளில் ஆண்டிபயாடிக் கலந்த உணவு பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளன. இந்த மாசு கொண்ட ஏற்றுமதி தேன் அங்கு அனுமதிக்கப்படுவதில்லை.
இந்தியா தேன் ஏற்றுமதியில் ஆண்டிபயாடிக் அளவுகளை கட்டுப்படுத்துகிறது, ஆனால் உள்நாட்டு விற்பனையில் முறைப்படுத்துதல் கடைபிடிக்கபடுவதில்லை. இந்திய அரசிடம் நம் நாட்டு மக்களின் ஆரோக்கியதிற்கு முன்னுரிமை இல்லை.
இந்த ஒழுங்குமுறை அலட்சியம் வெளிநாட்டு நிறுவனங்களை, தங்கள் சொந்த நாடுகளில் விற்க அனுமதி இல்லாத அசுத்தமான தேனை நம் நாட்டில் விற்க அனுமதிக்கிறது
உணவு நமது மக்களின் தொழில். ஆனால் அரசு அதை பெரிய நிறுவனங்களிடம் ஒப்படைக்க விரும்புகிறது. நம் நாட்டில் உணவு கட்டுப்பாடு மற்றும் முறைப்படுத்துதல் துறை வலுவற்றதாகவும் பொது சுகாதாரம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பில் பொறுப்பற்றதாகவும் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
புது தில்லி, செப்டம்பர் 15, 2010: நல்வாழ்வின் சின்னம் – கோடிக்கணக்கானோர் தூய, இயற்கை மற்றும் ஆரோக்கியமான என்று நம்பி வாங்கும் Nectar தேன் தேனீக்களுக்கு புகட்டப்பட்ட, நம் உடலுக்கு கேடு விளைவிக்ககூடிய ஆண்டிபயாடிக் மருந்துகளின் கலப்படமாக இருகின்றது. இது, முன்னர் பூச்சிக்கொல்லி மருந்துகளுக்காக கோலாக்களையும், விஷ வேதிப்பொருட்களுக்காக பொம்மைகளையும் சோதனை செய்த CSE –ன் கண்டுபிடிப்பு. இந்த ஆய்வு, முன்னணி பிராண்டு தேன்கள் கூட அதிக அளவில் – தடை செய்யப்பட்ட chloramphenicol, மேலும் ciprofloxacin மற்றும் erythromycin உள்ளிட்ட ஆண்டிபயாடிக் கலவைகளை கொண்டுள்ளதாக கண்டறிந்துள்ளது. இதில் ஏறக்குறைய சந்தையில் விற்கும் அணைத்து தேன் வகைகளும் அடங்கும். முன்னணி இந்திய தேன் உற்பத்தி நிறுவனங்களான டாபர், பைத்யநாத், படாஞ்சலி, காதி மற்றும் ஹிமாலயா, அனைத்தும் 2 முதல் 4 ஆண்டிபயாடிக்குகளை நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக அதன் தேன்களில் கொண்டிருந்தன. இதைவிட மோசம் என்னெவென்றால் சுவிட்சர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாட்டு இறக்குமதி தேன்களிலும் இதே நிலை இருந்ததுதான். இது அந்த நாடுகளில் கண்டிப்பாக அனுமதிகபட்டிருக்க முடியாது. இது கட்டுப்பாடு ஆணையத்தின் இரட்டை தர முறையையே காட்டுகிறது.
“வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் நிலவும் ஒழுங்கற்ற கட்டுபாட்டு முறைகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றன. மொத்தத்தில் இந்திய அரசுக்கே தனது மக்களின் சுகாதார நிலை பற்றி கவலை இல்லை என்றால், ஏன் இந்த நிறுவனங்களின் கவலைப்பட வேண்டும்.” இன்று இந்த கண்டுபிடிப்பு வெளியீட்டின் போது CSEன் இயக்குனர் சுனிதா நரேன் இவ்வாறு கூறினார். ஆனால் இந்தியா ஏற்றுமதி செய்யும் தேன்களுக்கு முறையான தரக்கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துகிறது. அனால் உள்நாட்டு விற்பனையில் இந்த கட்டுப்பாடு இல்லை. இது அறவே ஏற்றுக்கொள்ள முடியாதது. இது ஒருபுறம் இருக்க மேலும் CSEன் விசாரணை சர்வதேச தேன் வர்த்தகத்தில் மோசடி, ஏமாற்று மற்றும் சட்டவிரோத நடைமுறைகள் ஓங்கியுள்ளதை அம்பலப்படுத்தியுள்ளது.
இங்கே நமக்கு இரண்டு முக்கிய கேள்விகள், எழலாம்.
1. ஆண்டிபயாடிக் என்பது மருந்து தான். ஆனால் ஏன் தேனில் அவை கலப்படமாக கருதப்படுகிறது?
ஆண்டிபயாடிக்காக இருந்தாலும் அதை தினசரி சிறிய அளவில் நீண்ட காலம் எடுத்துகொண்டால் பல்வேறு உடல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். உதாரணதுக்கு oxytetracycline என்ற மருந்தை நீண்ட காலம் உட்கொள்ளும்போது இரத்த கோளாறுகள் மற்றும் கல்லீரல் பாதிப்புகள் ஏற்பபடலாம்.. ஆனால் இன்னும் முக்கியமாக இது ஆண்டிபயாடிக் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கி மருத்துவ முறைகளில் பெரும் சரிவை  ஏற்படுத்திவிடும்.

2. தேனில் எவ்வாறு ஆண்டிபயாடிக் கலக்கிறது.?
தேனீ வளர்ப்பு தொழிலில் உள்ள பரவும் நோய்களை கட்டுப்படுத்த மற்றும் தடுக்க ஆண்டிபயாடிக் பயன்படுத்துகிறது. மேலும் தேனீக்களின் வளர்ச்சி மற்றும் உற்பத்தி அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவும் இது பயன்படுத்தப் படுகிறது. இது தான் தேன்களில் தங்கிவிடுகிறது.
விளக்கங்கள் மற்றும் விவரங்களுக்கு, தொடர்பு சுபர்ணோ பானர்ஜி (souparno@cseindia.org, 9910864339) அல்லது குஷால் P S யாதவ் (kushal@cseindia.org, 9810867667)
CSE ஆய்வு பற்றி மேலும் தெரிந்துகொள்ள கீழுள்ள சுட்டியை சொடுக்கவும்.
நன்றி: CSE India.