Friday, May 25, 2012

Windows 8 - ஒரு பரிணாம வளர்ச்சியா?


விண்டோஸ் ன் பீட்டா பதிவிறக்கம் தயாரென்று கேள்வியுற்ற நீங்கள் உடனே விண்டோஸ் 8  -ற்கும் மற்ற முன்னோடிகளான ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு வழங்கும் புதிய இயங்குதளங்களுக்கும் பெரிய வேறுபாடுகள் எதுவும் இருக்காது என்று நினைத்தால் அது தவறு என்றுதான் நான் சொல்வேன். மேலோட்டமாக பார்த்தால் விண்டோஸ் 8, டேபிலேட் எனப்படும் தொடுதிரை கணினி மற்றும் அலைபேசிகளுக்கான சிறப்பம்சங்கள் கொண்ட வெறும் ஒரு இயங்குதளம் என்று கருதலாம். ஆனால் உண்மையில் மிகப்பெரிய அளவிலான மறுசீரமைப்பு பணி விண்டோஸ் இயங்குதளத்தில் நடந்தேறுகிறது. இந்த பதிவில் அத்தகைய மாற்றங்களில் சிலவற்றையும் அதனால் கணினி உலகில் ஏற்படப்போகும் தாக்கத்தையும் பார்போம்.

1.எளிய செயலாக்கம் (Simpler Processing)

தலையாய மாற்றமாக கருதப்படுவது, சக்திவாய்ந்த செயலாக்க முறையிலிருந்து விலகி இலகுவான மென்பொருள் அமைப்பை நோக்கி செல்தல் எனலாம். விண்டோஸின் தற்போதைய மிக அதிக வன்பொருள் தேவையால் (Hardware Demand) ஏற்பட்ட நகராத்தன்மையை(immobility) மாற்ற இந்த இலகுவாக்கல் அவசியமாக இருக்கிறது. இந்த புதிய விண்டோஸ் PC, Xboxes, Tablets மற்றும் phone களிலும் இயங்கத்தக்க அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு பெரிய ஒரு மாற்று தேவைப்பட்டது, அதாவது தற்போது விண்டோஸ் ARM அடிப்படையிலான chip ஐ பயன்படுத்துகிறது.

2. SkyDrive
மேற்கூறிய செயலாக்கம் தங்கு தடையின்றி செயல்பட வீட்டு network ஐ தாண்டிய ஒரு பொது network தேவை. விண்டோஸ் 8 –ன் பின் புலத்தில் இருக்கக்கூடிய ஒரு தொழில்நுட்பமாக இந்த skydrive விளங்குகிறது. இது cloud network ல் ஒரு மைல் கல்லாக கருதப்படுகிறது.

மேற்கூறிய எளிய செயலாக்க முறையும் skydrive –ம் இணையும்போது மிக எளிமையான மற்றும் சக்தி வாய்ந்த ஒரு கணினி அமைப்பு கிடைக்கிறது. அந்த சாதனத்திலிருந்து செயலாக்க மற்றும் சேமிப்பு தேவையை பிரித்து எடுக்கும்போது அந்த சாதனம் அது கணினியோ அல்லது அலை பேசியோ அது பன்மடங்கு மேம்பட்டு செயல்திறன் மிக்கதாக ஆகிறது. இது மைக்ரோசாப்ட் நிறுவனத்தை mobile சாதனங்கள் சந்தையில் கோலோச்ச முன்னோட்டமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Wednesday, May 23, 2012

thumbs.db எனப்படும் கேஷ் பைல்

விண்டோஸ் XP அல்லது விண்டோஸ் 7-ல் thumbs.db என்ற மறைக்கப்பட்ட(hidden) ஃபைல் அனேகமாக எல்லா ஃபோல்டர்களிலும் இருக்கும். அந்த ஃபைலானது, ஃபோல்டர்கள் தம்ப்நைல்(Thumbnail) அல்லது ஃபிலிம்ஸ்ட்ரிப்(Filmstrip) வியு மூலம்  பார்க்கப்படும்போது கணினியால் தானாக உருவாக்கப்படும். சிலர் அதை வைரஸ் என தவறாக எண்ணுவர். ஆனால் அந்த thumbs.db பைலானது ஒரு டேட்டா பேஸ் ஃபைல் ஆகும். அதன் உள்ளே ஒவ்வொரு ஃபைலையும் கிளிக் செய்யும்போது உருவாகும் நுண்ணிய பிம்பம்(tiny image for preview) சேமிக்கப்பட்டு இருக்கும். அது மறுமுறை அதே ஃபைல் கிளிக் செய்யப்படும்போது விரைவாக பிம்பம் காட்டுவதற்கு உதவுகிறது.

சில நேரங்களில் அந்த பைல் இடையூறாகவும் இருக்கக்கூடும். உதாரணமாக நாம் ஒரு ஃபோல்டரை பிரதி எடுக்கும்போது(copy) அல்லது இறுக்கம்(zip) செய்யும்போது அதுவும் கூட தோற்றிகொண்டு வந்துவிடும். அந்த ஃபைலை அழித்தாலும் மீண்டும் தானாக உருவாகும். thumbs.db ஃபைல் மீண்டும் உருவாகாமல் தடுக்க வேண்டும் என்றால், பின்வரும் முறையில் அதை செயல் இழக்க(disable) செய்யலாம்.

விண்டோஸ் XP  -ல்:

1. கண்ட்ரோல் பேனல்(Control Panel) சென்று ஃபோல்டர் ஆப்சனை(Folder Options) தேர்வு செய்யவும்.

2. அதில் வியு(view tab ) தேர்வு செய்து "Do not cache thumbnails" என்பதை தேர்வு செய்யவும்.









விண்டோஸ் 7 -ல்:

1. கண்ட்ரோல் பேனல்(Control Panel) சென்று ஃபோல்டர் ஆப்சனை(Folder Options) தேர்வு செய்யவும்.

2. அதில் வியு(view tab ) செலக்ட் செய்து Files and Folders -ன் கீழே "Always show icons never thumbnails" -ஐ தேர்வு செய்யவும். பின்பு "Display file icon on thumbnails" -ஐ விலக்கவும்.






இதன் பின்பு thumbs.db ஃபைல் உருவாகாது. ஆனால் நாம் ஒரு புகைப்பட தொகுப்பையோ அல்லது வேறு பிம்பங்கள் உள்ள தொகுப்பையோ பார்க்கும்போது ஃபோல்டர் தம்ப்நைல்(Thumbnail) அல்லது ஃபிலிம்ஸ்ட்ரிப்(Filmstrip) வியுவில் இருந்தால் thumbnail காட்டுவதற்கு காலம் அதிகமாக ஆகும். ஏனென்றால் பிம்பங்கள் இருத்தப்படாது (cache).

Windows 7 -ன் சில சிறப்பம்சங்கள்.



Microsoft -ன் சமீபத்திய ஆபரேடிங் சிஸ்டமான Windows 7  முந்தைய Windows விஸ்டா வை விட பலமடங்கு சிறந்ததாக உள்ளது. விஸ்டா-வில் இருந்த பல குறைகள் இதில் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன. மேலும் புதிய பல உபயோகமான அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றில் சில காட்சிசார்(Visual) அம்சங்களை இங்கு பார்ப்போம்.

1. ஏரோ ஷேக் (Aero-Shake)

நீங்கள் பல  விண்டோக்களை திறந்து வைத்து இருக்கும்போது குறிப்பாக ஒரு விண்டோவை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவற்றை கீழிறக்க(minimize) வேண்டுமென்றால் அந்த விண்டோவின் தலைப்புப்பட்டயை (Title Bar)
மவுசால் பிடித்துக்கொண்டு லேசாக இரு பக்கமும் ஆட்ட வேண்டும். உடனே மற்ற அணைத்து விண்டோக்களும் மினிமைஸ் ஆகி விடும்.

2. விண்டோ ஸ்டேக்கிங் (Window Stacking)
இது மற்றொரு புதுமையான அம்சம். ஒரு திறந்துள்ள விண்டோவை அப்படியே திரையின் ஏதேனும் ஒரு பக்கத்துக்கு உள்ளே கொண்டு சென்றால் அது உடனே பாதி திரை அளவுக்கு விரிந்து திரையின் பக்கத்தில் ஒட்டிக்கொள்ளும். இது முன்னர் விண்டோஸ் XP-ல் இருந்த விண்டோ டைளிங்(Tile) ஆகும். விண்டோஸ் 7-லும் டாஸ்க் பாரை ரைட் கிளிக் செய்யும்போது கிடைக்கும் மெனுவில் இந்த ஸ்டேக்கிங் உண்டு.

3. ஏரோ பீக் (Aero-Peek)
இது மற்றுமொரு பயனுள்ள அம்சம். நீங்கள் பல விண்டோக்களை ஓபன் செய்து வைத்து இருக்கும்போது திடீரென்று டெஸ்க்டாப்பை பார்க்க வேண்டும் என்று வைத்துக்கொள்வோம். வழக்கமாக அனைத்து விண்டோக்களையும் மினிமைஸ் செய்து விட்டு டெஸ்க்டாப்பை பார்க்க வேண்டும். பின்னர் மீண்டும் ஒவ்வொரு விண்டோவையும் மேக்ஸிமைஸ் செய்ய வேண்டும்.

 ஆனால் விண்டோஸ் 7-ல் உள்ள இந்த Aero-Peek மூலம் டெஸ்க்டாப்பை எளிதாக ப்ரிவியு செய்யலாம். மவுஸ் கர்சரை டாஸ்க் பாரின் வலது மூலைக்கு கொண்டு சென்றால் போதும், அனைத்து ஓபன் செய்யபட்டுள்ள விண்டோக்களும் தற்காலிகமாக மறைந்து டெஸ்க்டாப் காணக்கிடைக்கும். கர்சரை விலக்கினால் மீண்டும் அனைத்து விண்டோக்களும் தெரியும். இந்த அம்சத்தை செயலிழக்கவும் செயல்படுத்தவும் செய்யலாம். அதற்க்கு டாஸ்க் பார் பிராப்பர்டீஸ் ஓபன் செய்து அதில் "Use Aero Peek" ஆப்ஷனை தேர்வு செய்ய அல்லது விலக்க வேண்டும். (பார்க்க படம்.)

Sunday, February 5, 2012

ஆனியன் சில்லி காடை


(Onion Chilli Kaadai)

தேவையானவை:


காடை - 1/4 கிலோ
இஞ்சி பூண்டு விழுது - 2 தே.கரண்டி
மிளகாய்த்தூள் - 1/2 தே.கரண்டி
உப்பு - 1/2 தே.கரண்டி
சிக்கன் 65 மசாலா - 2 தே.கரண்டி
பெரிய வெங்காயம் - 2
ப.மிளகாய் - 2
கறிவேப்பிலை - 1 கொத்து
சமையல் எண்ணெய் - 50 மில்லி


செய்முறை:

1. காடையை தேவையான அளவில் துண்டாக நறுக்கி கழுவி ஒரு கோப்பையில் வைத்துக்கொள்ளவும்.
2. அதில் இஞ்சி பூண்டு விழுது,மிளகாய்த்தூள்,உப்பு,சிக்கன் 65 மசாலா இவற்றை போட்டு கால் மணி நேரம் ஊற வைக்கவும்.
3. ஒரு கடாயில் எண்ணையை ஊற்றி காய்ந்தவுடன் காடை கலவையை அதில் இட்டு மூடி வைத்து வேக வைக்கவும். பொரிக்க கூடாது. பாதி வெந்த நிலையில் வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலை நறுக்கியதை போட்டு முழுவதும் வேக விடவும்.
4. நன்கு வெந்தவுடன் எடுத்து சூடாக பரிமாறலாம்.