காடை - 1/4 கிலோ
இஞ்சி பூண்டு விழுது - 2 தே.கரண்டி
மிளகாய்த்தூள் - 1/2 தே.கரண்டி
உப்பு - 1/2 தே.கரண்டி
சிக்கன் 65 மசாலா - 2 தே.கரண்டி
பெரிய வெங்காயம் - 2
ப.மிளகாய் - 2
கறிவேப்பிலை - 1 கொத்து
சமையல் எண்ணெய் - 50 மில்லி
செய்முறை:
1. காடையை தேவையான அளவில் துண்டாக நறுக்கி கழுவி ஒரு கோப்பையில் வைத்துக்கொள்ளவும்.
2. அதில் இஞ்சி பூண்டு விழுது,மிளகாய்த்தூள்,உப்பு,சிக்கன் 65 மசாலா இவற்றை போட்டு கால் மணி நேரம் ஊற வைக்கவும்.
3. ஒரு கடாயில் எண்ணையை ஊற்றி காய்ந்தவுடன் காடை கலவையை அதில் இட்டு மூடி வைத்து வேக வைக்கவும். பொரிக்க கூடாது. பாதி வெந்த நிலையில் வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலை நறுக்கியதை போட்டு முழுவதும் வேக விடவும்.
4. நன்கு வெந்தவுடன் எடுத்து சூடாக பரிமாறலாம்.

